BA Saiva Siddhanta
Department of Saiva Siddhanta
சைவ சித்தாந்தத் துறை 2024 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்துறை, துறையின் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை 50 ஆகும். சைவ சித்தாந்தம் என்பது சிவபெருமானை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்கின்ற, தென் இந்தியாவில் (குறிப்பாக தமிழ்நாடு) தோன்றிய மிகப் பழமையான தத்துவ மரபாகும். இது தமிழ்ச் சைவ இலக்கியம் மற்றும் வேத ஆகம என இரு மரபின் சங்கமமாக விளங்குகிறது.சைவ சித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவங்களான பதி, பசு, பாசம் ஆகியவற்றை மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து, ஆன்மிகமும் அறிவியலும் இணைந்த ஆழமான சிந்தனைத் திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திருமுறைகள், சைவ ஆகமங்கள் மற்றும் சைவ சமய மரபுகள் மூலம் மாணவர்களின் ஆழ்ந்த விளக்கத் திறன், தர்க்க சிந்தனை மற்றும் அறநெறி உணர்வு வளர்க்கப்படுகின்றன.இத்துறை மாணவர்களில் ஒழுக்கம், பக்தி, மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்பு போன்ற உயரிய பண்புகளை விதைத்து, ஆன்மிக அடிப்படையிலான முழுமையான மனித வளத்தை உருவாக்குகிறது. தொடர்ச்சியான பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் ஆன்மிகக் கலந்துரையாடல்கள் மூலம் மாணவர்களை ஆய்வு, கற்பித்தல், சமயப் பணிகள் மற்றும் சமூக சேவைக்குத் தயார்படுத்துவதே இத்துறையின் முக்கிய இலக்காகும்.